மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது எவ்வாறு? : விடயங்களை சமர்ப்பிக்குமாறு கோட்டாபயவுக்கு அழைப்பாணை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 18, 2024

மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது எவ்வாறு? : விடயங்களை சமர்ப்பிக்குமாறு கோட்டாபயவுக்கு அழைப்பாணை

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்காவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை தொடர்பிலான விடயங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிப்பை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு ஐந்து வயதுக் குழந்தை உட்பட இடம்பெயர்ந்த எட்டு பொதுமக்களை வெட்டிக் கொன்ற வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது,

மாற்றுக் கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்படி, மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

No comments:

Post a Comment