கெஹெலியவின் பிணை சீராய்வு மனுவை நிராகரித்த நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 3, 2024

கெஹெலியவின் பிணை சீராய்வு மனுவை நிராகரித்த நீதிமன்றம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை தொடர்பில் இந்த சீராய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததோடு ,அதனை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை வழங்கினார்.

No comments:

Post a Comment