கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசிளுடன் சான்றிதழ் - News View

About Us

About Us

Breaking

Friday, April 12, 2024

கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசிளுடன் சான்றிதழ்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா வழங்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு விசேட சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் 1,50,000 இரத்த பரிசோதனை கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

604 பொலிஸ் நிலையங்களுக்கு இந்த இரத்த பரிசோதனை கருவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

அதேபோன்று, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதற்கான சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட விசேட பயிற்சிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment