அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் பங்களிப்பு அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் பங்களிப்பு அதிகரிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. 

இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.

இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபாய் 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாயினை வழங்கியுள்ளது.

அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான விசேட வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment