இரு மாதங்களில் 964 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 26, 2024

இரு மாதங்களில் 964 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ள இலங்கை

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இந்த அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இன்று (26) இடம்பெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மூலம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment