கொழும்பு கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் இறைச்சிக் கடை உரிமையாளர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 57 வயதான கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment