ஆண் போல் நடித்து மாணவியை காதலித்த யுவதி கைது - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

ஆண் போல் நடித்து மாணவியை காதலித்த யுவதி கைது

அநுராதபுரம் - கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு, மாணவியின் தகாத புகைப்படங்களை பெற்று, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணுக்கு மார்ச் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் பேச்சில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த புகைப்படங்கள் வெளியானதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டபோதே, யுவதி ஒருவரே இளைஞனாக வேடமணிந்து காதலித்து வந்துள்ளமை மாணவிக்கு தெரியவந்துள்ளது.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியுடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.

19 வயது யுவதி 15 வயது மாணவியிடம் தன்னை ஆண் என அறிமுகம் செய்துள்ளார். 

தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரலில் அழைத்து இந்த உறவைப் பேணி வந்துள்ளார். இந்த உறவு சுமார் ஒரு வருடமாக தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment