உலகில் அதிக விலைக்கு அப்பிள் விற்கும் நாடுகள் : இலங்கை எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2024

உலகில் அதிக விலைக்கு அப்பிள் விற்கும் நாடுகள் : இலங்கை எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலகில் ஒரு கிலோ கிராம் அப்பிள் பழத்தை அமெரிக்க டொலரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதனை உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ (Numbeo) வெளியிட்டுள்ளதாக The Spectator Index டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளதுடன் இங்கு 7.04 அமெரிக்க டொலருக்கு அப்பிள் பழம் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை முதலிடத்தில் இருக்கும் நியூயோர்க்கில் 7.05 டொலருக்கு அப்பிள் விற்பனை செய்யப்படுகின்றது.

அப்பிள் பழத்தை அதிக விலைக்கு விற்கும் நாடுகளின் பட்டியலில் இறுதி இடத்தில் பாகிஸ்தானின் லாகூர் இருக்கின்றது. 

இங்கு ஒரு கிலோகிராம் அப்பிள் 1.05 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment