ஓய்வூதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்களிப்பு : எனினும் TIN பெறுவது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 7, 2024

ஓய்வூதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்களிப்பு : எனினும் TIN பெறுவது கட்டாயம்

இலங்கையில் சுமார் 07 இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத்துக்கு வருமான வரியோ அல்லது உழைக்கும்போது செலுத்தும் வரியோ அறவிடப்பட மாட்டாதென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதன்படி, சுமார் 7,05,000 ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வருமான வரி மற்றும் ஏனைய வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜெயநாத்திடம் இது தொடர்பாக கேட்டபோது, நாட்டில் சுமார் 7,05,000 ஓய்வூதியம் பெறுவோர் இருப்பதாகவும், அவர்களில் 55 வீதம் முதல் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் 40 வீதம் முதல் 45 வீதமானவர்கள் பெண்கள் என்றும் கூறினார். 

இருப்பினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும் வருமான வரிக்கு பதிவு செய்யும் அரசின் கொள்கையின்படி, ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஏனைய பரிவர்த்தனைகளுக்காக (TIN) Taxpayer Identification Number இலக்கத்தை பெற வேண்டும்.

பொதுச் செலவினங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயில் 72% அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கும் ஒதுக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் 1,265 பில்லியன் ரூபா அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்பட்டது. 

சமுர்த்தி கொடுப்பவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 506 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

No comments:

Post a Comment