டெங்கு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவில் நேற்று (06) முதல் நிறுவப்பட்டுள்ள 011 7966366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் உட்பட காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை டெங்கு நோய் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை பற்றிய விபரங்களையும் தெரியப்படுத்தலாமென்றும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (07.01.2024) முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 88,398 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 18,650 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்தில் 58 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment