தாதியர் பயிற்சிக்கு மாணவர் நேர்முகப் பரீட்சை : அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 7, 2024

தாதியர் பயிற்சிக்கு மாணவர் நேர்முகப் பரீட்சை : அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்கள்

தாதியர் பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட தகுதி தேர்வு நேர்முகப் பரீட்சை தொடர்பான அனைத்து விவரங்களும் இப்போது சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரிகள் இணையதளத்தை பார்த்து, நேர்முகப் பரீட்சையின் திகதி, இடம் மற்றும் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அறிவித்துள்ளது.

2019/2020 க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த 4,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து மாணவர் தாதியர் பயிற்சியை தெரிவு செய்வதற்காக இம்மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 18ஆம் திகதி வரை ஆரம்பநிலை தகுதி தேர்வு நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment