உலகக் கிண்ணதுக்கான இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா புறப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 11, 2024

உலகக் கிண்ணதுக்கான இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா புறப்பட்டது

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இன்று (11) காலை தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சர்வமத அனுஷ்டானங்களை தொடர்ந்து இலங்கை அணி புறப்பட்டது.

இத்தொடரின் முதலாவது பயிற்சி ஆட்டம் ஜனவரி 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி சந்திக்கும் முதல் போட்டியில் சிம்பாப்பே அணியை எதிர்வரும் 21ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

சிறந்த அணி தயார் செய்யப்பட்டிருப்பதாகவும், சிறப்பான சுற்றுப்பயணத்தை எதிர்கொள்ள முடியும் என்றும், இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜெஹான் முபாரக் மற்றும் அணித் தலைவர் சினேத் ஜெயவர்தன ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, இலங்கை சுற்றுப்பயணத்தை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment