ரயில் பெட்டியை உடைத்து திரிபோச பக்கற்றுக்களை திருடிய இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, November 13, 2023

ரயில் பெட்டியை உடைத்து திரிபோச பக்கற்றுக்களை திருடிய இருவர் கைது

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோச பக்கற்றுக்களை திருடிச் சென்ற இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாரா திணைக்களத்திற்கு திரிபோச பக்கற்றுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோச பக்கற்றுக்கள் திருட்டுப்போயிருந்தது. சம்பவம் தொடர்பில் 7ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, திருடப்பட்ட திரிபோச பக்கற்றுக்களை இருவர் விற்பனை செய்துவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.எம்.எஸ்.கயநாயக்கா தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்றையதினம் இரவு கருவப்பங்கோணி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இருவரை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்ததுடன் திருடப்பட்ட சிறியளவிலான திரிபோச பக்கற்றுக்களை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்தவர்களை இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment