சிறுவர்களிடையே குறும்பார்வை குறைபாடு அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 16, 2023

சிறுவர்களிடையே குறும்பார்வை குறைபாடு அதிகரிப்பு

கண் பார்வை அழுத்தம், நீரிழிவு, கண்புரை போன்ற நோய்கள் காரணமாக சிறுவர்கள் மற்றும் வயதானவர்களிடையே குறும்பார்வை குறைபாடு பாரியளவில் அதிகரித்து வருவதாக சிரேஷ்ட கண் மருத்துவ நிபுணரும், இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் தலைவருமான சானக பண்டார வீரசுந்தர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பொது நூலகத்தில் இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் வருடாந்த இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தும் நிகழ்வின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெவித்துள்ளதாவது, உலகில் சராசரியாக 30 சதவீதமானோர் தற்போது குறும்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவீதமாக அதிகரிக்கலாம். அதாவது, 500 கோடி (5,000,000,000) பேருக்கு குறைபாடு இனங்காணப்படலாம் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறும்பார்வை குறைபாட்டின் வளர்ச்சியில் மரபணு காரணிகள் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்பு கொள்கின்றன.

எனவே, வெளியில் நேரத்தை செலவிடுவதால் கண்ணில் வெயில் படுவதன் மூலம் குறும்பார்வை குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படலாம். பிள்ளைகள் மூன்று வயதை அடைவதற்கு முன்பு டிஜிட்டல் திரைகளை பார்ப்பதனால் குறும்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டிஜிட்டல் திரைகளை பார்வையிடுவதில் அதிக நேரம் செலவிடுவதால் குறைந்தளவு அவர்கள் சிமிட்டுகிறார்கள். இதன் காரணமாக கண்கள் வறண்டு போகும்.

எனவே, சிறுவர்கள் குறும்பார்வை குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர சூரிய ஒளியைப் பெற வேண்டும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சரியான மருந்துகள் இன்மையால் குறும்பார்வை குறைபாடு அதிகரிக்கலாம். இது சிறுவர்களின் கண் இமைகள் நீண்டு நீளமாக வளரும்போது ஏற்படும்.

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 'ரெஃப்ராக்டிவ் எர்ரர்' (Refractive error) என்ற ஒளி விலகல் குறைபாட்டால் பாதிப்படையும் ஆபத்தை மிக அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, 40 வயதை எட்டிய பின்னர் கண் பரிசோதனையில் ஈடுபட வேண்டும்.

ப்ரெஸ்பியோபியா என்பது வயது தொடர்பான கண் நோயாகும், இதில் அருகில் உள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்தும் கண்களின் திறன் படிப்படியாக மோசமடையும்.

கண் பரிசோதனை முகாமில் சர்க்கரை நோயால் ஏற்படும் கண் நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முன்பள்ளி மற்றும் (மூன்றரை வயது) தரம் ஒன்றில் சேர்வதற்கு முன்பும் அவர்களின் கண்களை பரிசோதிக்க வேண்டும்.

எனவே, உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் மருத்துவமனைகளை நடத்தும் திட்டத்தை இலங்கை கண் மருத்துவ சங்கம் ஆரம்பித்துள்ளது.

“புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கண் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு, அனுராதபுரம் மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது தமது கண்களின் உட்பகுதி உட்பட கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment