(எம்.மனோசித்ரா)
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு பயணமானார்.
பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்புவார் எனத் தெரியவருகிறது. எனவே பதில் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் தொலைபேசி அழைப்பின் ஊடாகவே வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதன்போது இலங்கை - மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இரு தரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment