கட்டுநாயக்கவில் சிக்கிய 11 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் மாத்திரைகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 16, 2023

கட்டுநாயக்கவில் சிக்கிய 11 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் மாத்திரைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 11 கோடி ரூபா பெறுமதியான 16 தங்க ஜெல் மாத்திரைகளை கொண்டு வந்த சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனித் தெருவில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.

இவர் இன்றையதினம் அதிகாலை 01.40 மணியளவில் துபாய் ஏர்லைன்ஸில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகநபர் பயணித்த விமானத்திற்குள் பிரவேசித்த அதிகாரிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

சோதனையில் சுமார் 06 கிலோ 423 கிராம் மற்றும் 9 மில்லி கிராம் எடையுடைய தங்க ஜெல் 16 மாத்திரைகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தங்க ஜெல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் அவரது கையடக்கத் தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையையும் பெற விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அறிக்கைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment