பலஸ்தீன் மக்களுக்கான எனது ஆதரவு தொடரும் - மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

பலஸ்தீன் மக்களுக்கான எனது ஆதரவு தொடரும் - மஹிந்த ராஜபக்ஷ

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவு தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பலஸ்தீன தூதுவரை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகெங்கும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் போர் அதற்கு தீர்வு அல்ல என்றும் பலஸ்தீன் தூதருடனான கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இலங்கையின் போர் தொடர்பான அனுபவங்களில் இருந்து சமாதானத்தின் அவசியத்தை பலஸ்தீன தூதருக்கு எடுத்துக்கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அமைதியை நிலைநாட்டுவது இரு நாடுகளுக்கும் இடையிலான செழிப்பை உறுதிப்படுத்தும் என்றும் கூறினார்.

பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற ரீதியில் நான் பலஸ்தீன போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறேன். ஆனால் போர் ஒரு போதும் இதற்கு தீர்வாகாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment