முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாமிய இனவாத, தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுகிறார்கள் - டானிஷ் அலி - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாமிய இனவாத, தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுகிறார்கள் - டானிஷ் அலி

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இஸ்லாமிய இனவாத மற்றும் தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுகிறார்கள் என தீவிர ஜனநாயக சக்தியின் தலைவர் டானிஷ் அலி தெரிவித்தார்.

தீவிர ஜனநாயக சக்தியின் தலைவர் டானிஷ் அலி இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே போர் மோதல்கள் நாளுக்குநாள் மோசமாகி வருகின்றன. 

இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டில் இஸ்லாமிய இனவாத மற்றும் தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுவதை நாம் காண்கிறோம்.

அத்துடன் முன்னிலை சோஷலிச கட்சி உட்பட பல இடதுசாரி அரசியல் கட்சிகள் காஸா மோதல் என்ற போர்வையில் இந்நாட்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக செயற்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment