இன்று (16) அதிகாலை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி, கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிதிமூகலான பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவில, சமிந்து மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட வேளையில், சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பதிலுக்கு கந்தானை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிரிபத்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் என தற்போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment