போதைப் பொருள் பாவனைக்கெதிரான சமூக எழுச்சி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களினை அறியத் தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பில், போதைப் பொருள் பாவனைக்கெதிரான சமூக எழுச்சி வேலைத்திட்டம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் போதைப் பொருள் பாவனைக்கெதிரான சமூக எழுச்சி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களினை பெற்று அவர்களினை தனிப்பட்ட ரீதியில் அத்தீய செயற்பாடுகளில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளினை சம்மேளனம் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், தங்களது மஹல்லாவில் போதைப் பொருள் பாவிப்போர் அல்லது விற்பனையுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களினை எமக்கு அறியத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், தங்களால் வழங்கப்படும் தகவல்கள் மிக இரகசியமாக பேணப்படுவதுடன், தங்களது பள்ளிவாயல் மஹல்லாவினை போதையற்ற மஹல்லாவாக (Drugs Free) பிரகடனம் செய்வதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையாகும்.
எம்.எஸ்.எம். நூறுதீன்
No comments:
Post a Comment