கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் நிதி அமைச்சருக்கு வழங்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தின் நிறைவில், இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment