கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்ட நில நடுக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்ட நில நடுக்கம்

தென்னிந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பெருங்கடலில் இன்று (01) பிற்பகல் 12.59 மணிக்கு 5.6 மெக்னிட்யூட் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென்மேற்கே 1260 கிலோ மீட்டருக்கு அப்பால், கடலில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் கொழும்பு, வெள்ளவத்தை, காலி, பெபிலியான, நெலுவ, பத்தரமுல்லை, அக்குரெஸ்ஸ, உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகத்தின் புவிச்சரிதவியல் நிபுணர் மஹிந்த செனவிரத்ன குறிப்பிட்டார்.

எனினும் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment