முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையின்படி சைவ வழிபாடுகள் மேற்கொள்ளலாம் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நாங்கள் எல்லோரும் இம்மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 09 மணிக்கு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடத்தில் ஒரு பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
ஆகவே அனைவரையும் அந்த பொங்கல் வழிபாட்டில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்
No comments:
Post a Comment