தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே கல் வெட்டு நிறுவப்பட்டது : பௌத்தலோக நற்பணி மன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 4, 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே கல் வெட்டு நிறுவப்பட்டது : பௌத்தலோக நற்பணி மன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவிப்பு

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர் மலையில் பௌத்தலோக நற்பணி மன்றம் கல்வெட்டை நிறுவியதாக பௌத்தலோக நற்பணி மன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே அவ்வாறு கல் வெட்டு அமைக்கப்பட்ட செயற்பாடு சட்டவிரோதமான செயற்பாடு அல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடத்தில் புனரமைப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடயங்களை மேற்கொண்டுள்ளது.

தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் இவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமிருக்கின்றது.

இந்த பெயர்ப் பலகை விடயம் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு இங்கு இடம்பெற்றுள்ள புனரமைப்புக்களை மேற்கொண்டவர்கள் யாரெனத் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த பெயர்ப் பலகை முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தவிடயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள எந்த இனத்தவர்களுக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் இழைக்கப்படவில்லை.

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றே பௌத்தலோக நற்பணி மன்றம் இந்த பெயர் பலகையை அமைத்தது. எனவே இந்த பெயர்ப் பலகை அமைக்கப்பட்டது சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என்றார்.

No comments:

Post a Comment