சக்சுரின் யானையை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லை என தாய்லாந்து தெரிவித்துள்ளது.
சக்சுரினிற்கு தற்போது தாய்லாந்து மன்னர் ஆதரவளிப்பதால் அதனை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்போவதில்லை என தாய்லாந்தின் இயற்கை வள சூழல் விவகார அமைச்சர் பீபிஎஸ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்த கேள்விக்கே இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து யானையை திருப்பி அனுப்ப வேண்டும் என இலங்கையின் சிரேஸ்ட மதகுரு ஒருவர் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தாய்லாந்து வழங்கிய ஸ்ரீநரோங் பிரதுபா என்ற ஏனைய இரண்டு யானைகளும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. இலங்கையிடம் அவற்றை பராமரிக்கும் திறன் உள்ளது. அவை நல்ல நிலையில் உள்ளது. ஒரு யானைக்கு மாத்திரம் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment