அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம் - மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 5, 2023

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம் - மைத்திரி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போதைப் பொருள் பாவனை பிரதான காரணியாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்குகள் அதிகம், வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு பின்னர் சமூக கட்டமைப்பில் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து மதங்களின் ஒத்துழைப்புடன் சிறந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சமூக விரோத செயற்பாடுகளுக்கும், குற்றங்களுக்கும் பிரதான காரணியாக உள்ளது. இதன் காரணமாகவே வழக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளின் பின்னணியாக போதைப் பொருள் பாவனை காணப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு ஏழ்மையும் ஒரு காரணியாக உள்ளது. ஆகவே, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அவதானம் செலுத்துவதுடன், வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

வழக்குகள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதை வழக்கறிஞர்கள் விரும்புவார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்போது வழக்கறிஞர்கள் மாத்திரமே பயனடைவார்கள். ஆகவே, வழக்குகளை வெகுவிரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment