இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில கௌரவ தலைவராகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் செந்தில் தொண்டமான், திருச்சிக்கு சென்றவேளை அவருக்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவா் ஒண்டிராஜ், மாநில செயலா் சூரியூா் ராஜா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனா்.
பின்னர் திருச்சியிலுள்ள சின்ன மிளகுப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியதாவது, தமிழக மீனவா்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதில்லை. கடல் அலையின் சீற்றம் காரணமாக சில நேரங்களில் எல்லை தாண்ட நேரிடுகிறது. அப்போது இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும், இலங்கை அரசிடம் பேசி, மீட்டுக் கொடுக்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். எங்களது பணி தொடரும்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்றுடன் தொடா்புடையது வீர விளையாட்டான ஐல்லிக்கட்டு. இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
No comments:
Post a Comment