பதிவு செய்யப்படாத மருந்துகளை உபயோகத்துக்கு எடுத்துக் கொள்வதில்லையென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்து பாவனையின்போது சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதை சுட்டிக் காட்டிய அமைச்சர், அவ்வாறு பதிவு செய்யப்படாத மருந்துகளை பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27 இன் 02 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச இது தொடர்பான கேள்வியில், நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துப் பொருட்களின் உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் அந்த பொறுப்புகளை சரிவர முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
இதற்கு அமைச்சர் தொடர்ந்தும் பதிலளி்க்கையில், கண்டி வைத்தியசாலையில் இடம்பெற்ற கண் சொட்டு மருந்து தொடர்பிலேயே எதிர்க்கட்சித்தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், அந்த மருந்து 07 வருடங்கள் பயன்படுதப்பட்டுள்ளது. அது பதிவு செய்யப்பட்ட மருந்தாகும். அவ்வாறில்லாமல் பதிவு செய்யப்படாத தரம் குறைந்த மருந்துமல்ல. குறித்த மருந்து 07வருடங்களாக பயன்படுத்தப்படுவதுடன் 53 நாடுகளுக்கு அது அனுப்பப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment