இளைஞரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த தேரர் ! ஜப்பானில் கையும் களவுமாக சிக்கினார் - News View

About Us

About Us

Breaking

Monday, July 3, 2023

இளைஞரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த தேரர் ! ஜப்பானில் கையும் களவுமாக சிக்கினார்

இளைஞன் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானில் இளைஞர் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் உள்ள யஜிமாதா விகாரையில் இளைஞர் ஒருவரை அழைத்து தகாத உறவில் ஈடுபட முயற்சித்தபோது, விகாரைக்கு வருகை தந்த சிலரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

பின்னர், அவர் ஜப்பானிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment