எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு தயாரிப்பு - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 5, 2023

எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு தயாரிப்பு - இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(நா.தனுஜா)

சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளகப் பொதுக் கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரதான நோக்கமென சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இம்முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் பெரும்பாகப் பொருளாதாரக் குறிகாட்டிகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அதன் மூலம் எதிர்வரும் காலங்களில் முன்நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படத்தக்க அச்சுறுத்தல்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை சர்வதேச கடன் வழங்குனர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் எந்தவொரு எதிர்மறைத்தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அச்செயற்திட்டம் வெளிப்படையானதும் ஒப்பீட்டு ரீதியானதுமான கருத்தியல்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment