வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு குரங்கம்மை : அடையாளம் காணப்பட்ட இரு பெண்களும் IDH இல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு குரங்கம்மை : அடையாளம் காணப்பட்ட இரு பெண்களும் IDH இல்

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்த்தனவின் கருத்துப்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது (IDH) தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

டுபாயிலிருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், இவர்களுக்கு குரங்கு அம்மை தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதேவேளை, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் கணவர், வெளிநாட்டிலிருந்த போது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், 2022 நவம்பரில் தொற்று நோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தமை குறிப்பிடத்தகது.

No comments:

Post a Comment