மூன்றாம் தரப்பு மூலம் சாரதி அனுமதி அட்டை : எட்டரை இலட்சம் பேருக்கு வழங்க முடிவு - News View

About Us

About Us

Breaking

Monday, June 12, 2023

மூன்றாம் தரப்பு மூலம் சாரதி அனுமதி அட்டை : எட்டரை இலட்சம் பேருக்கு வழங்க முடிவு

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எட்டரை இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் மூன்றாம் தரப்பினரால் அச்சிடப்பட்டு உரிமதாரர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மட்டும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment