கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளை உடனடியாகக் குறைக்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைவடையும் என சில சங்கங்கள் குறிப்பிட்டாலும் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளே தற்போது விற்பனையில் உள்ளதால் அவ்வாறு உடனடியாக விலைக் குறைப்பை மேற்கொள்ள முடியாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவிக்கையில், தற்போது சந்தையில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிப்பாகங்களின் விலைகளை சுமார் 20 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதால் அதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment