எதிர்காலத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் : புதிய தொழில் சட்டத்தை விரைவில் சமர்ப்பிப்போம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

எதிர்காலத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் : புதிய தொழில் சட்டத்தை விரைவில் சமர்ப்பிப்போம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒன்றிணைந்த தொழில் சட்ட கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்காக புதிய தொழில் சட்டத்தை மிக விரைவில் தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு சமர்ப்பிப்போம். அதனைத் தொடர்ந்து அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாெழில் சட்டத்தை மா்றறுவது தொடர்பாக கடந்த 6 வார காலங்களுக்குள் இடம்பெற்ற பொதுமக்கள் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் அமர்வுகளின்போது முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணைகளை சுருக்கிக்கொண்டு, ஒன்றிணைந்த தொழில் சட்ட கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான பிரேரணை சுருக்கத்தை புதன்கிழமை (14) தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த வாரங்களில் தொழிற்சங்கங்கள், தொழில் முயற்சியாளர்கள், முதலாளிமார்கள், சட்ட துறை நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணைகளை அடிப்படையாகக் கொண்டு தொழில் சட்ட திருத்தத்துக்கான பிரேரணை தாெகுப்பாென்றை தயாரித்திருக்கிறோம். அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி இருக்கிறோம்.

அதன் பிரகாரம் நவீன உலகுக்கு பொருத்தமில்லாத தொழில் சட்டத்தை மாற்றயமைப்பாேம். புதிய கருத்துக்களை பெற்றுக் கொண்டு புதிய தொழில் சட்டம் ஒன்றையே நாங்கள் முன்வைப்போம்.

சேவை நிலையத்துக்குள் வித்தியாசம் பார்க்கப்படுவதை தடுப்பதற்கு நாங்கள் சட்டம் கொண்டுவருவோம். சம்பள சபை கட்டளைச் சட்டம் மற்றும் கடை மற்றும் காரியாலய சட்டத்தில் இருக்கும் வித்தியாசங்களை ரத்துச் செய்து அனைவரையும் சமமாக கருதும் வகையில் நடவடிக்கை எடுப்போம்.

மேலும் சேவை காரியாலயங்களில் நெருக்குவாரங்களுக்கு ஆளாகுவதை தடுத்தல் மற்றும் அனைத்து வகையிலுமான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ஊழியரின் விருப்பத்தின் பிரகாரம் 5 நாட்களுக்காக வேலை வாரம் மற்றும் நெகிழ்வுத் தன்மையுடனான வேலை நாட்களை அறிமுகப்படுத்துவோம்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெண் ஊழியர்களை இரவு நேர சேவையில் ஈடுபடுத்த தேவையான ஏற்பாடுகளை பெற்றுக் கொடுப்போம்.

அதேபோன்று மகப்பேறு விடுமுறை தொடர்பில் சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை பெற்றுக் கொடுப்போம்.

மேலும் வீடுகளில் இருந்து சேவை செய்வதை முறைப்படுத்துவதற்காக ஒழுங்கு முறை ஒன்றை அறிமுகப்படுத்துவோம்.

தேசிய சம்பள சபை ஒன்றை அறிமுகப்படுத்துவோம். அதன் ஊடாக காலத்துக்கு ஏற்ற மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமைகளுக்கு அமைய அடிப்படைச் சம்பள முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றின் மூலம் மகப்பேறு பிரதிபலன்கள், ஊழியர்களின் ஆராேக்கியம் மற்றும் வேலையில்லாத சந்தர்ப்பத்தில் இழப்பீடு வழங்கும் சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment