கட்டான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வுப் பொலிஸ் சார்ஜென்ட் ஆவார்.
கடந்த ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது, தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, நடத்தை விதிகளை மீறியதாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் முதலில் ஒப்புக் கொண்ட அவரை, பணி நீக்கம் செய்ய பொலிஸ் தலைமை கண்காணிப்பாளரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய புதன்கிழமை (14) பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment