(இராஜதுரை ஹஷான்)
மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது மறுகணமே உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் சங்கங்கத்தின் தலைவர்கள் மூலப் பொருட்களின் விலைகள் குறைவடையும்போது குருடர்களாகி விடுகின்றர். சங்கங்கள் பாதாளக் குழுவினரைப்போல் மனசாட்சி இல்லாமல் செயற்படுகின்றன என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைவடைந்துள்ள நிலையில் வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள வெதுப்பகங்களில் 75 சதவீதமான வெதுப்பகங்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன என்று வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிடுவது ஆச்சிரியத்துக்குரியது.
மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது மறுகணமே உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் சங்கத்தின் தலைவர்கள் மூலப்பொருட்களின் விலைகள் குறைவடையும்போது குருடர்களாகி விடுகின்றனர்.
கடந்த ஆண்டு எரிபொருள், மின்சார கட்டணம் மற்றும் எரிவாயு அதிகரிப்பு, கட்டம் கட்டமாக உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் பாதாளக் குழுவினரைப்போல் மனசாட்சி இல்லாமல் செயற்படுகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்தாலும் அதன் பயன் ஒட்டு மொத்த மக்களையும் சென்றடைவதில்லை. வர்த்தகர்களும், தொழிற்சங்கத்தினர் மாத்திரமே பயன் பெற்றுக் கொள்கிறார்கள்.
நாட்டில் நுகர்வோர் அதிகார சபை என்பதொன்று உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை என்பதொன்று இல்லாத காரணத்தால் வர்த்தகர்களே விலைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
நுகர்வோர் இருந்தால்தான் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை வர்த்தகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment