துறவறத்துக்கு இணைத்துக் கொள்ளும் வயதெல்லையை பௌத்த சங்க சபையுடன் கலந்துரையாடி தீர்வு காண்பது சிறந்தது - மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

துறவறத்துக்கு இணைத்துக் கொள்ளும் வயதெல்லையை பௌத்த சங்க சபையுடன் கலந்துரையாடி தீர்வு காண்பது சிறந்தது - மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள்

(இராஜதுரை ஹஷான்)

இளம் சிறுவர்களை பௌத்த துறவறத்துக்கு இணைத்துக் கொள்ளும் குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பில் பௌத்த சங்க சபையுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது சிறந்ததாக அமையும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் புத்தசாசனம், மத மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை கண்டி மல்வத்து, அஸ்கிரிய மகா விகாரையில் நேற்றுமுன்தினம் சந்தித்தபோது மகாநாயக்க தேரர்கள் அமைச்சருக்கு மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பௌத்த துறவறத்துக்கு இளம் சிறுவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

துறவறத்துக்கான குறைந்த பட்ச வயதெல்லையை தீர்மானிப்பது தொடர்பில் இதுவரை ஒரு தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் பௌத்த மகா சங்க சபையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுப்பது சிறந்ததாக அமையும் என மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அந்த நிலையில் இருந்து மீட்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

No comments:

Post a Comment