இலங்கையில் அழகுசாதன பொருட்களால் தோல் நோய்கள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

இலங்கையில் அழகுசாதன பொருட்களால் தோல் நோய்கள் அதிகரிப்பு

நாட்டில் தோல் நோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலங்களில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவனத்தின் தலைவர் விசேட வைத்தியர் சிறியானி சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள் உடலில் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை ஏற்படுத்தும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பிலான விசேட வைத்தியர் இந்திரா கஹாவிட்ட குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment