பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் பல்கலைக்கழக அக்பர் விடுதியின் மூன்றாவது மாடியில் அறையொன்றில் உள்ள குளியலறையில் இன்று (16) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
22 வயதுடைய நகுனராசா குகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த மாணவருடன் மேலும் மூன்று மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டதுடன் அவர்களில் மூவர் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பேராதனை பொலிஸ் பரிசோதகர் விஜித் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment