பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் ஒரு திருத்தத்துக்கு உட்பட்டதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நீண்ட கால மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பது முக்கியமானது என்றும், வரவு செலவுத்திட்ட பகுப்பாய்வு செயல்முறைக்குத் தேவையான சுதந்திரத்தை இந்த நடைமுறை உறுதி செய்யும் என்றும் குழுவின் தலைவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
சட்டமூலத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து குழு விசேட கவனம் செலுத்தியது, வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் விடயதானம் பொருளாதார செலவுகள் மற்றும் வருவாய் உருவாக்கம் ஆகியவற்றின் மதிப்பீடுகளுக்கு மாத்திரமானதாகும்.
அதாவது, சமூகத் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமை. அரசாங்க நிதி பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு ஆகியவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்தல்.
அரசியலமைப்புப் பேரவையின் ஊடாகப் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்காகத் தெரிவு செய்யப்படுபவர்களைப் பட்டியலிடும் செயற்பாட்டில் ஆலோசனைக் குழுவினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல்.
அத்துடன் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வதற்கும், வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டத்துக்கு அமையவே தொடர்புடைய விடயத்துக்கான முக்கிய தரவைப் பகிர்ந்துகொள்வதற்கான திறன்.
மேலும், புதிய சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கைகளை சுயாதீன ஆய்வுக்காக பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அறிக்கையின் விதிகளை மிகவும் வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக முன்வைக்க முடியும்.
அதன்படி, பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் சட்டவாக்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனம் என்றும், இதனால், நிதி முன்னறிவிப்புகளில் சாத்தியமான நிதி தாக்கம் குறித்து மாற்று முறைகளைப் பயன்படுத்தி முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இதற்கமைய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் வரவு செலவுத்திட்டத்தை 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற திருத்தத்துக்கு உட்பட்டு சட்டமூலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment