திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல, குமாரதுங்க மாவத்தை, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று (13) காலை 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மகனை பாடசாலையில் விட்டுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் காரொன்றில் வந்த நபர்கள் T56 வகை துப்பாக்கியால் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்ப்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர், திக்வெல்ல, வலஸ்கல, தெமட்டபிட்டிடிய பகுதியைச் சேர்ந்த மங்கள யசலால் குமாரதுங்க எனும் 51 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திக்வெல்ல, பத்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment