சகல அரசியல்வாதிகளும் இனி வருமானத்தை பதிய வேண்டும் : புதிய விதிமுறைகளின் கீழ் 2024 முதல் கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

சகல அரசியல்வாதிகளும் இனி வருமானத்தை பதிய வேண்டும் : புதிய விதிமுறைகளின் கீழ் 2024 முதல் கட்டாயம்

புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ் சகல அரசியல்வாதிகளும் வருமானத்தை பதிவு செய்ய வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், புதிய விதிகளின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமானத்தை பதிவு செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருமானப் பதிவேடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே புதிய விதிகளின் படி, குறிப்பாக பாராளுமன்றம், மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்களும் வருமானத்தை பதிவு செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். 

இவ்விடயத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் விசேட சலுகை வழங்கப்படமாட்டாது. நாட்டில், யார் வரி செலுத்த வேண்டும் என்பதை இத்திட்டம் தீர்மானிக்குமென்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment