ஒக்டோபர் 15 இல் தரம்‌ 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று முதல் ஜூலை 06 வரை விண்ணப்பிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

ஒக்டோபர் 15 இல் தரம்‌ 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று முதல் ஜூலை 06 வரை விண்ணப்பிக்கலாம்

2023 தரம்‌ 5 புலமைப்பரிசில் பரீட்சை, இவ்வருடம் ஒக்டோபர்‌ 15 ஆம்‌ திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக, பரீட்சைகள்‌ ஆணையாளர்‌ நாயகம் எச்‌.ஜே.எம்‌.சீ. அமித்‌ ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று (15) முதல் ஜூலை 06 ஆம்‌ திகதி வரை நிகழ்நிலை (Online) மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்‌ என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வௌியிட்டுள்ள அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023 ஜுலை 06 ஆம்‌ திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்‌ பின்னர்‌ நிகழ்நிலை முறைமை மூடப்படும்‌. எக்காரணத்திற்காகவேனும்‌ விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும்‌ திகதி நீடிக்கப்பட மாட்டாது என்பதை கவனத்திற்‌ கொள்ளவும்‌.

பாடசாலைகளுக்கு மாணவர்களைத்‌ தேர்ந்தெடுப்பதற்கும்‌ உதவிப்பணம்‌ வழங்குவதற்குமாக இடம்பெறும் தரம்‌ 5 புலமைப்பரிசில்‌ பரீட்சைக்கு, அரசாங்கப்‌ பாடசாலையொன்றில்‌ அல்லது அரசாங்கத்தினால்‌ அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையொன்றில்‌ தரம்‌ 5 இல்‌ கல்வி பயிலும்‌ மாணவர்கள்‌ மாத்திரமே தோற்ற முடியும்‌.

2024 ஜனவரி 31 ஆம்‌ திகதியன்று 11 வயதுக்குக்‌ குறைந்த 10 அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம்‌ உடைய மாணவர்களுக்கு மாத்திரமே உதவிப்பணம்‌ வழங்கப்படும்‌.

விண்ணப்பங்கள்‌ நிகழ்நிலை முறைமையிலேயே (Online) அனுப்பப்பட வேண்டும்‌.

விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்‌, பிரமாணங்கள்‌ ஆகியவற்றை https://onlineexams.gov.ik/eic ஊடாக பிரவேசித்து பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

விசேட தேவைகளுடைய மாணவர்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய விதம்‌ தொடர்பான அறிவுறுத்தல்கள்‌ அறிவுறுத்தற்‌ பத்திரத்தில்‌ விவரமாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு,

தொலைபேசி இலக்கம்‌
011-2784208, 011-2784537, 011-2786616, 011-2786200, 011-2784201, 011-2785202

உடனடி தொலைபேசி இலக்கம்‌
1911

தொலைநகல்‌ இலக்கம்‌
011-2784422

No comments:

Post a Comment