எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 31, 2023

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் !

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய,
பெற்றோல் ஒக்டேன் 92
ரூ. 333 இலிருந்து ரூ. 15 இனால் குறைப்பு

பெற்றோல் ஒக்டேன் 95
ரூ. 365 இலிருந்து ரூ. 20 இனால் அதிகரிப்பு

சுப்பர் டீசல்
ரூ. 330 இலிருந்து ரூ. 10 இனால் அதிகரிப்பு

மண்ணெண்ணெய்
ரூ. 295 இலிருந்து ரூ. 50 இனால் குறைப்பு

தொழிற்துறை மண்ணெண்ணெய்
ரூ. 330 இலிருந்து ரூ. 60 இனால் குறைப்பு

ஒட்டோ டீசல்
ரூ. 310 (விலை மாற்றமில்லை)

அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்,
பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ.318
பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 385
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ.340
மண்ணெண்ணெய் : ரூ.245
தொழிற்துறை மண்ணெண்ணெய் : ரூ. 270
ஒட்டோ டீசல் : ரூ.310

LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 01 முதல் பெற்றோல் 92 ரூ.333; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 295 ஆக விலை திருத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 30 முதல் பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295 ஆக விலை திருத்தப்பட்டது.

கடந்த மார்ச் 02 முதல் மண்ணெண்ணெய் ரூ. 50 இனால் குறைக்கப்பட்டிருதது.

கடந்த பெப்ரவரி 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 30 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்பு கடந்த ஜனவரி 03 முதல் டீசல் ரூ. 15 இனாலும்; மண்ணெண்ணெய் ரூ. 10 இனாலும் குறைக்கட்பட்டிருந்தது.

No comments:

Post a Comment