மஹிந்தவுக்கும், ரணிலுக்குமிடையில் எவ்வித போட்டியுமில்லை : நாமல் அகப்படமாட்டார் என்கிறார் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Ads

Wednesday, May 31, 2023

மஹிந்தவுக்கும், ரணிலுக்குமிடையில் எவ்வித போட்டியுமில்லை : நாமல் அகப்படமாட்டார் என்கிறார் ஜோன்ஸ்டன்

(எம்.வை.எம்.சியாம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித போட்டியுமில்லை. ஜனாதிபதி சிறப்பாக செயல்படுகிறார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது என்கிறார்கள். பெரும்பாண்மையான மொட்டுக் கட்சியினர் வாக்களித்தே அவரை நியமித்துள்ளோம். அவர் சரியாக வழிநடத்துகிறார் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திங்கட்கிழமை (29) வடமேல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, என்னுடைய முன்னாள் தலைவர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு செல்கிறார். மஹிந்த ராஜபக்ஷ 30 வருட கால யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்.

சீனாவுக்கு அடுத்ததாக எமது வளர்ச்சி வேகம் காணப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட முடியாத அளவில் அரசியலமைப்பை மாற்றினார்கள். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித போட்டிகளுமில்லை.

ஜனாதிபதி சிறப்பாக செயல்படுகிறார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது என்கிறார்கள். பெரும்பான்மையான மொட்டுக் கட்சியினர் வாக்களித்தே அவரை நியமித்துள்ளோம். அவர் சரியாக வழிநடத்துகிறார் என நினைக்கிறேன்.

மேலும் நாமலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவிருக்கிறதா? என ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், அவ்வாறு எந்தவொரு பேச்சு வார்த்தைகளும் இடம்பெறவில்லை. பிரதமர் ஒருவர் இருக்கிறார். இவை அனைத்தும் பிரச்சினைகளையும், குழப்பங்களை ஏற்படுத்தும் கதைகள். நாமல் அதற்கு அகப்ப்டமாட்டார் என்றார்.

No comments:

Post a Comment