சிறுநீரக நோயாளர் மற்றும் வயோதிபர்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் எவ்வித குறைப்புமின்றி தொடருமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் பயனாளிகள் போன்ற பிரிவுகளின் கீழ் நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5,20,000 க்கும் அதிகமான மக்களுக்கு வழமை போன்று அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment