அரச உத்தியோகத்தர்களின் கடன் கழிப்பனவை தள்ளிப்போடுங்கள் : இம்ரான் எம்.பி கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

அரச உத்தியோகத்தர்களின் கடன் கழிப்பனவை தள்ளிப்போடுங்கள் : இம்ரான் எம்.பி கோரிக்கை

அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை தள்ளிப்போடுமாறு இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையினை நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ளார்.

ஏப்பரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதமாகும். இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும்.

இந்நிலையில் கடன் பெற்ற அரச ஊழியர்களின் கடன் கழிப்பனவுகள் போக எஞ்சிய தொகை பண்டிகையை கொண்டாட போதுமானதாக இல்லை என பெரும்பாலான அரச ஊழியர்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திற்கான கடன் கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment