கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை முனையத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அல்லது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையிலோ செயற்படுவோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்போவதாக வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் அமைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் 'பீ' அறிக்கையினூடாக நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் சில நேரங்களில் எரிபொருள் போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்புப் பிரிவினர் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும் அந்த வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment