தென்னிலங்கையின் சக்தி வாய்ந்த பாதாள உலகக்குழு செயற்பாட்டாளரும் பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல் காரருமான நந்துன் சிந்தக என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' உள்ளிட்ட மூன்று பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் குழுவொன்று டுபாய் செல்லவுள்ளது.
ஹரக் கட்டாவுக்கு மேலதிகமாக ஷிரான் பாசிக் மற்றும் அசங்க ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இந்த பொலிஸ் குழு இன்று (08) அல்லது நாளை (09) புறப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூவருக்கும் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிம்புலா எல குணா உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியங்கர ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment