இலங்கை வந்தார் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 2, 2023

இலங்கை வந்தார் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland) புதன்கிழமை (01) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் மேலும் 3 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் விசேட விருந்தினராக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland) பங்கேற்கவுள்ள நிலையிலேயே இங்கு வருகை தந்துள்ளார்.

பற்றீசியா ஸ்கொட்லன்ட் உள்ளிட்ட குழுவினரை விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment